Spread the love

பழனி நவ, 24

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் சேவை உள்ளது. கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் சென்று வருவதற்கு தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி ரோப்கார் நிலையத்துக்கு புதிதாக 10 பெட்டிகள் வாங்கப்பட்டன.

உபரியாக வைத்திருந்த 2 பெட்டிகள் வர்ணம் பூசி பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வர்ணம் பூசப்பட்ட 2 பெட்டிகள் புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. பின்னர் அந்த பெட்டிகள் ரோப்காரில் பொருத்தப்பட்டன. பார்ப்பதற்கு அழகாக உள்ளதால், பக்தர்கள் அதில் ஆனந்தத்துடன் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *