சேலம் நவ, 27
வாழப்பாடி அருகே மேற்கு ராஜாபாளையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார். ஆரியபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்கு மார் தலைமையில், காசநோய் மேற்பார்வையாளர்கள் விஜயசாரதி, அன்பழகன், நம்பிக்கை மைய பணியாளர்கள் லட்சுமணன், வித்யா, அகிலா, சுஜிதா நிதிஷ்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர், நடமாடும் எக்ஸ்-ரே பரிசோதனை இயந்திரத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு காசநோய் பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். மேலும் இந்நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய் ஏற்படா வண்ணம் தடுக்கும் வழிமுறைகள் பற்றி கருத்துகளை தெரிவித்தனர்.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பேபி பாக்யராஜ், உறுப்பினர்கள் ஜெயராமன், வீரமுத்து, அங்கமுத்து, செந்தில்குமார், வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.