நெல்லை நவ, 27
கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 6 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று பொதுமக்கள் தங்களது வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். வள்ளியூர் அருகே உள்ள மாவடி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மண்பானை தொழிலாளர்கள் மண் விளக்குகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்குள்ள தொழிலாளர்கள் நம்பியாற்று தண்ணீரை வைத்து சிறிய மண் விளக்குகள் மண்பானை உள்ளிட்ட பொருட்கள் செய்வதால் நெல்லை மாவட்டத்தில் இதற்கு தனி மவுசு உண்டு.
இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படு கின்றன. சில வருடங்களாக அரசு மண் எடுப்பதற்கு தடை விதித்த நிலையில் மண்ணில்லாமல் திருவிளக்கு உற்பத்தி செய்ய முடியாமலும் போதிய வருமானம் இல்லாமலும் மண் பானைத் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அரசு அறிவித்த நிவாரணம் கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என வருத்தத்துடன் அவர்கள் தெரிவித்தனர்.