நெல்லை நவ, 28
பொருநை இலக்கிய திருவிழா தமிழக அரசு சார்பில் நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று மாலையில் நடந்தது.
பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடந்த இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கினார். பொது நூலக இயக்கக இயக்குனர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பொன்னீலன், உதவி ஆட்சியர் கோகுல், பவா.செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் ஓலை சுவடிகள் வெளியிடப்பட்டது. இதனை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார். எழுத்தாளர் பொன்னீலன் உள்ளிட்டவர்கள் பெற்றுக்கொண்டனர். விரைவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.