நெல்லை நவ, 25
திருநெல்வேலி மாவட்டம் பொருநை இலக்கியத் திருவிழா 2022 நடைபெறுவதை முன்னிட்டு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆட்சியர் கோகுல், துணை மேயர் ராஜு ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள். உடன் சிறப்பு அழைப்பாளராக சாகித்ய அகாடமி விருது பெற்று எழுத்தாளர் வண்ணதாசன் உடன் உள்ளார்.