நெல்லை நவ, 23
தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்வந்திருந்தார்.
குமரி மாவட்ட நிகழ்ச்சியை முடித்து விட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அவர் தங்கினார். அவரை இன்று காலை நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ அய்யப்பன், கனகராஜ், பாளை யூனியன் சேர்மன் தங்கப்பாண்டியன், ஒன்றிய செயலாளர் போர்வெல் கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.