நெல்லை நவ, 19
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86-வது நினைவு தினத்தையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகம் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் உலகநாதன், ரவீந்தர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, மாநகராட்சி செய்தி தொடர்பாளர் ஆறுமுகசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.