தேனி நவ, 25
தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குடிமைப் பொருட்களின் அளவு, புகார் அளிக்கப்பட வேண்டிய அலுவலர்களின் கைபேசி எண்கள் குறித்து முறையாக தகவல் பலகையில் பதியப்படுள்ளதா, விற்பனை முனைய எந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதா என ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தார்.