தேனி நவ, 26
தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, சீலையம்பட்டி, உப்புக்கோட்டை, டொம்பிச்சேரி, உப்பார்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயிகள் மல்லிகைப்பூ, கனகபரம், சென்டு பூ, பிச்சிப்பூ ரோஜா பூ உட்பட பல்வேறு பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
மேலும் கடந்த மாதத்தில் தீபாவளி ஓனம் ஆயுத பூஜை ஆகிய முக்கிய தினங்களில் மட்டும் பூக்களின் விலை அதிகரித்து வந்தது. மேலும் தற்பொழுது பணி காலம் ஆரம்பமாகி உள்ளதால் பூக்களின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. மேலும் தற்பொழுது சபரிமலை சீசன் என்பதினால் ஐயப்ப பக்தர்கள் அதிகளவு கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.
மேலும் திருக்கோவிலூருக்கு அதிகளவு அய்யப்ப பக்தர்களும், முருக பக்தர்களும், பொதுமக்களும் சென்று வருவதினால் பூக்களின் தேவை அதிகரித்து வருகிறது. பூக்களின் தேவை அதிகரிப்பினால் கடந்த சில தினங்களாக 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ரோஜா பூவானது தற்பொழுது 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ரோஜாப்பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.