கிருஷ்ணகிரி நவ, 22
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7432.65 ஏக்கர் பரப்பளவில் 3,720 விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் அதிகப்பட்ச மல்பெரி பரப்பு இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த ஆண்டில் கூடுதலாக 715 ஏக்கர் பரப்பளவில் 395 விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 10 மாதங்களில் 1,425 டன் அளவில் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள், கிருஷ்ணகிரி, ஓசூர் பட்டுக்கூடு அங்காடிகளிலும், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம் பட்டுக்கூடு அங்காடிகளிலும், கர்நாடகா மாநில கோலார், ராம்நகர் பட்டுக்கூடு அங்காடிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. பட்டு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு, பட்டு வளர்ச்சித்துறை மூலம் மாநில திட்டத்தின் கீழ் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.