கிருஷ்ணகிரி நவ, 24
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பாக பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தை சார்ந்த, வாழ்வோருக்கான மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம் நடந்தது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஓசூர் உதவி ஆட்சியர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, கிருஷ்ணகிரி உதவி ஆட்சியர் சதீஸ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பழனிசாமி, கதிரவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.