கிருஷ்ணகிரி நவ, 21
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மாநிலத் துணைத் தலைவர் நல்லா கவுண்டன் தலைமையில் நடைபெற்றது.
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ், மாநில பொருளாளர் முத்துச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் ஈ அடங்கலை எளிமையாக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்டம் மாறுதலை அனைவருக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக அறிவழகன், மாவட்ட தலைவராக லட்சுமணன், மாவட்ட பொருளாளராக ராம்சுரத்குமார் உள்ளிட்ட 10 பேர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.