காஞ்சிபுரம் நவ, 22
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு, சமூக நல துறையின் சார்பில், 2023-ம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது, உலக மகளிர் தின விழா மார்ச் 2023-ல் வழங்கப்பட உள்ளது. மேற்படி விருதுக்கு தகுதியுடைய நபர் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மேலும் 10.12.2022-க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் மாவட்ட சமூக நல அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் 2 பிரதிகளை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.