விருதுநகர் செப், 3
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்று விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், பாதள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் சீரமைத்தல், சுகாதாரப் பணிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா,நகர்மன்ற துணைத்தலைவர் ஹமீது சுல்தான், நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், நகராட்சி பொறியாளர் மீரான் அலி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்கள்