விருதுநகர் செப், 3
விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று மாலை விருதுநகரில் 42 விநாயகர் சிலைகள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலையில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.