சிவகாசி செப், 4
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மேலும் பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உயிர்த் தொழில் நுட்பவியல் துறை தலைவர் சபருன்னிஷாபேகம் வரவேற்றார். பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்-பொறியாளர் ராஜீ கோவிந்தராஜன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு உயிர்செல் முறைகளுக்கு கணக்கீட்டு திரவ இயக்கவியல் பயிற்சி அளிக்கப்படும். மேலும் திரவ இயக்கவியல் பற்றிய பயிற்சி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும். எடுத்துரைக்கப்பட்டது.