புதுடெல்லி மே, 24
ராகுல் டிராவிட், வி வி எஸ் லக்ஷ்மணனை தொடர்ந்து ரிக்கி பாண்டிங், ஆண்டிப்ளவர், ஜஸ்டின் லாக்கர் உள்ளிட்ட வெளிநாட்டு பயிற்சியாளர்களும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதால் புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் தற்போது பிசிசிஐ இறங்கி உள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 27 ம் தேதியுடன் நிறைவடைகிறது.