புதுடெல்லி ஜன, 7
டி20 உலக கோப்பை வரும் ஜூன் மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் டி20 போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடிய ராகுலும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.