புதுடெல்லி அக், 2
உலககோப்பை போட்டிகளில் அதிக சதம் அடித்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 32 சதங்களை பதிவு செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 31 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து இலங்கை(25) வெஸ்ட் இண்டீஸ்(19), இங்கிலாந்து (18), நியூசிலாந்து (17),பாகிஸ்தான் (16), தென் ஆப்பிரிக்கா (15), ஜிம்பாப்வே (6) வங்கதேசம்(5) அயர்லாந்து(5 )ஆகிய அணிகள் உள்ளன.