நீலகிரி ஆகஸ்ட், 17
ஊட்டி அருகே நஞ்சநாடு ஊராட்சி சமுதாயக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் ஊராட்சியில் அனைவருக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் செயல்படுதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், அரசால் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கூறினார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குநர் ஜாகீர் உசேன், ஊட்டி வருவாய் பிரிவு அதிகாரி துரைசாமி, உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன், நஞ்சநாடு ஊராட்சி தலைவர் சசிகலா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.