சென்னை ஜூலை, 8
சென்னை மெரினா கடற்கரையில் 2023 இன்று முதல் 11ம் தேதி வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் இன்று முதல் 11ம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் நடைபெறும். இப் போட்டிகளில் மண்டல அளவில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி அணிகள் பங்கேற்க உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.