நேபாளம் ஜூன், 25
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நேபாள அணியை தோற்கடித்தது. பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நேபாளத்துடன் மோதியது. இதில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, நரோம் மகேஷ் சிங் தலா ஒரு கோலடித்தனர். இறுதிவரை இந்த நிலை நீடிக்கவே இந்தியா 2-0 என்று கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.