திருவள்ளூர் நவ, 23
குறைத்திருக்கும் நாள் கூட்டம் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைத்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், செங்குன்றம் ஆகிய சுற்றுவட்டார பகுதியிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் நில பிரச்சனை, பசுமை வீடு, சாலை வசதி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு, கடன் உதவி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் பயிற்சி துணை மாவட்ட ஆட்சியர் கேத்தரின் சரண்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, கலால் உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் பள்ளித்துறை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.