திருவள்ளூர் நவ, 20
பொன்னேரியை அடுத்த அனுப்பப்பட்டு உத்தண்டி கண்டிகையில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுப்பம்பட்டு, சிறுவாக்கம், காட்டூர், கம்மார்பாளையம் உள்ளிட்ட 8 பள்ளிகளுக்கு தலா ரூ.18.90 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.1 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கட்டிடத்தின் திறப்பு விழா உத்தண்டி கண்டிகை அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இதில் காமராஜர் துறைமுகம் தலைவர் சுனில் பாலிவால், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், சேர்மன் ரவி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் பிரவீனா சங்கர் ராஜா, கதிரவன், பானுபிரசாத், ரமேஷ், அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு கலந்து கொண்டனர்.