Month: December 2022

எரிபொருள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.

அரியலூர் டிச, 16 தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து எரிசக்தி பாதுகாப்பு குறித்த மாணவர்களுக்கு இடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள்…

பாரதியார் பிறந்தநாளையொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்.

நெல்லை டிச, 16 மகாவி பாரதியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வருகிற 18 ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு பிரிவின் கீழ் நடைபெறும் போட்டியில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். 1…

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு.

சென்னை டிச, 16 2023 ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வ அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது பற்றி வெளியான அறிவிப்பில், நடந்து முடிந்த குரூப் 2 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு பிப்ரவரி 25ல் நடைபெற உள்ளது.…

பெட்ரோல் விலை அதிகரிப்பு.

புதுடெல்லி டிச, 16 தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கலால் வரியை…

இனி ஆதார் மூலம் ரேசன் வாங்கலாம்.

சென்னை டிச, 16 ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தில் ஆதார் மூலம் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில் அளித்துள்ளார்.’ ஒரே நாடு ஒரே ரேஷன்’ அட்டையை பயன்படுத்தி நாட்டில்…

உள்ளாட்சி நிதி உயர்வு. முதல்வர் உத்தரவு.

சென்னை டிச, 16 தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாகத்தில் சிறந்த மாற்றத்தை உருவாக்கும் வகையில், உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிராம ஊராட்சிகளுக்கு 5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு 25 லட்சம் வரையிலும்,…

திருவண்ணாமலை மகாதீபம் இன்றுடன் நிறைவு.

திருவண்ணாமலை டிச, 16 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. டிசம்பர் 6 ம் தேதி ஏற்றப்பட்டது 11 நாட்களாக 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் எரிந்து வந்த நிலையில் நாளை காலை தீபக் கொப்பரையை…

83 மருந்துகள் தரமற்றவை.

சென்னை டிச, 16 நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளில் 1,487 மருந்துகள் கடந்த மாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் உயர் ரத்த அழுத்தம் காய்ச்சல், சளி, கால்சியம் ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 83 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.…

ஆதார் மின் இணைப்புக்கு கூடுதல் சிறப்பு முகாம்.

சென்னை டிச, 16 ஆதார்-மின் இணைப்புக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தேவைப்பட்டால் ஆதார் மின் இணைப்புக்கு கூடுதல் சிறப்பு முகாம் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மின்வாரியம் தயாராக உள்ளது என்றார். டிசம்பர்…

இடைநின்ற‌ மாணவர்களை கண்டறிய உத்தரவு.

சென்னை டிச, 16 தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விபரங்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது. அந்த விவரங்கள் அடிப்படையில் குழந்தைகளின் வீட்டுக்கே நேரடியாக சென்று அவர்களை மீண்டும்…