அரியலூர் டிச, 16
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து எரிசக்தி பாதுகாப்பு குறித்த மாணவர்களுக்கு இடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, தங்கபாண்டி, வீரபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.