புதுடெல்லி டிச, 16
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கலால் வரியை குறைத்தால் சில மாநிலங்கள் பெட்ரோல் விலையை குறைக்கின்றன ஆனால் ஆறு மாநிலங்கள் மட்டும் குறைப்பதில்லை எனக் கூறியுள்ளார்.