புது டெல்லி டிச, 14
கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாரா கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மாநிலங்களவையில் பேசிய அவர் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கும் தகவல் படி கடந்த 5 நிதி ஆண்டுகளில் ரூபாய் 10 லட்சம் கோடி வாராக் கடன்களை பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் ரத்து செய்துள்ளன. மேலும் ரூ.1,32,036 கோடி வாராக் கடன்கள் உட்பட 6 லட்சம் கோடி கடன்களை மீட்டுள்ளன என்றார்.
