Month: November 2022

தொடர் கனமழை. இன்று மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

சென்னை நவ, 3 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்த நிலையில் கனமழை காரணமாக…

தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம்.

அரியலூர் நவ, 3 ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய…

பெங்களூருவில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.

பெங்களூரு நவ, 3 கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் நவம்பர் மாதம் 2-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. மேலும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி…

‘கைதி’ ரீமேக்கில் இணையும் அமலாபால். வெளியான அறிவிப்பு.

சென்னை நவ, 2 தமிழில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘கைதி’ திரைப்படம் இந்தியில் ‘போலோ’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான…

குரங்கு அம்மை பரவல் எதிரொலி. சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவித்த உலக சுகாதார நிறுவனம்.

ஜெனீவா நவ, 2 உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு…

சேலம் டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வருமான வரித்துறை சோதனை

சேலம் நவ, 2 சேலம் டி.வி.எஸ். ரோடு பகுதியில் பிரபல ஜவுளி கடைகள் உள்ளன. இதில் ஒரு ஜவுளிக்கடைக்கு நீலகிரி, கரூர், குளித்தலை உள்பட பல பகுதிகளில் கிளை நிறுவனங்களும் உள்ளன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெற்ற ஜவுளி…

மேற்கு வங்க முதல்வர்-ஸ்டாலின் சந்திப்பு.

சென்னை நவ, 1 மேற்கு வங்காள கவர்னராக (பொறுப்பு) உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்துள்ளார். இந்நிலையில், சென்னை வந்துள்ள மம்தா பானர்ஜி தற்போது தமிழ்நாடு…

திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்க கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

நெல்லை நவ, 2 நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பாளையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் 2வது முறையாக திமுக. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்…

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி. பாளை மின்வாரிய அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை.

நெல்லை நவ, 2 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் பாலமூர்த்தி (வயது 21). இவர் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் துணிகளை…

நெல்லையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு.

நெல்லை நவ, 2 உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2 ம்தேதியை கல்லறை திருநாளாக கடைப்பிடிக்கிறார்கள்.இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள். இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதியான இன்று கல்லறை திருநாள்…