Month: September 2022

மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு செப், 16 மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் இன்று காலை அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். செங்கல்பட்டில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். உடன் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள…

கேரளாவில் தொடரும் ராகுல் காந்தியின் நடைபயணம்.

திருவனந்தபுரம் செப், 16 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் 150 கிலோமீட்டர் தூரம்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷிய அதிபரை சந்திக்கும் பிரதமர் மோடி.

சமர்கண்ட் செப், 16 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து வியாழக்கிழமை உஸ்பெஸ்கிஸ்தான் சென்றடைந்தார். மேலும் மாநாட்டின் ஒரு பகுதியாக, ரஷிய அதிபர்…

பாளையில் சாலைகளை சீரமைக்க கோரி அதிமுக நிர்வாகி நூதன போராட்டம்.

நெல்லை செப், 15 நெல்லை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் பயணிக்கும்…

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் கண்டெடுப்பு.

திருவண்ணாமலை செப், 15 ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் விளைசித்தேரி கிராமத்தின் சாலையோரம் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் உள்ள சிற்பம் கி.பி. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர்கால கொற்றவை சிற்பம் என்பது உறுதியானது. அத்துடன் கோவிலுக்கு அருகிலேயே விஷ்ணு அல்லது சிவன்…

ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூர் செப், 15 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சேரன்குளம் மற்றும் ஆதிச்சபுரம், சேரி, பனையூர் ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊராட்சித் துறை ஆணையர் கலந்து…

மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள்.

ராமநாதபுரம் செப், 15 ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் ஈ.சி.ஆர் சாலையில் இன்று தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய்…

ஏர் இந்தியா பெயர் மாற்றம்.

மும்பை செப், 15 ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் விலைக்கு வாங்கியதில் இருந்தே ஏர் இந்தியாவை எப்படியெல்லாம் முன்னேற்றுவது என்பது குறித்து டாடா குழுமம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏர் இந்தியாவை உலகத்தரம்…

தெலுங்கானாவில் புதிய தலைமைச்செயலக கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர்

ஐதராபாத் செப், 15 தெலங்கானா அரசின் தலைமை செயலகம் 132 ஆண்டுகளாக சைபாபாத் நிஜாம் நவாப்களின் அரண்மனையாக இருந்து வந்தது. பின்னர் ஒருங்கிணைந்த ஆந்திராவில் 16 முதல்வர்கள் ஆட்சி செய்தனர். தனி தெலங்கானாவாக உருவான பிறகு 2வது முறையாக சந்திரசேகரராவ் முதல்வராக…

வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் செப், 15 பூங்கா சாலையில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா…