Month: September 2022

சங்கராபுரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி செப், 16 சங்கராபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்து…

அரசு சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா சிலைக்கு, ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு செப், 16 மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் உள்ள பெரியார்-அண்ணா நினைவகம் நேற்று முன்தினம் இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசின் சார்பில் நேற்று அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி,…

விருத்தாசலத்தில் நவீன எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்.

கடலூர் செப், 16 விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடலூர் ரோடு இந்திரா நகரில் உள்ள 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா…

பழங்கால பொருட்களை பார்த்து ரசித்த பொதுமக்கள்.

ராமேசுவரம் செப், 16 ராமேசுவரம் புது ரோடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று தொல்லியல் பொருட்கள் கண்காட்சி மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ஜெனோபா தலைமை தாங்கினார்.…

அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டி.

தேனி செப், 16 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேனியில் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவு சைக்கிள் போட்டிகள் இன்று நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக வயது வாரியாக 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளை…

திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

தென்காசி செப், 16 தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் செங்கோட்டை காவல் நிலையம் அருகில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளா் செல்லத்துரை தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர்…

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் எண்ணெய் கசிவு, காவலர்கள் உடனடி நடவடிக்கை

நெல்லை செப், 16 நெல்லை சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பாலத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனத்தில் கசிவு ஏற்பட்டு சாலையில் சிறிது தூரம் எண்ணெய் பரவியது.…

திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மாற்றம்.

நெல்லை செப், 16 தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரெயில்கள் பற்றிய விபரம்: நாகர்கோவில்-திருநெல்வேலி(வண்டி எண்:06641) இடையே மாலை…

நகர் மன்ற தலைவர்-18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் சந்திப்பு

கீழக்கரை செப், 16 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைதெரு 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதாவை நகராட்சி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி…

இந்துக்கள் பற்றி அவதூறு பேச்சு. ஆ.ராசா மீது நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு.

நெல்லை செப், 16 நெல்லை மாவட்ட பாரதியஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக வெங்கடாஜலபதி என்ற குட்டி உள்ளார். வக்கீலான இவர் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்து வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,நெல்லை…