நெல்லை செப், 16
நெல்லை மாவட்ட பாரதியஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக வெங்கடாஜலபதி என்ற குட்டி உள்ளார். வக்கீலான இவர் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்து வழக்கு தொடர்ந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நெல்லை மாவட்ட நீதிமன்றம் வக்கீல் சங்க அலுவலகத்தில் நான் இருந்த போது எனது செல்போன் மூலம் யூடியூப்பை பார்த்த போது அதில் திமுக துணை பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியது தெரியவந்துள்ளது.
மேலும் இந்து மக்களை பற்றியும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார். ஒரு இந்துவாக எனது மனம் மிகவும் வேதனையடைந்துள்ளது.
தொடர்ந்து அவர் இதுபோன்று பேசி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.