Category: திண்டுக்கல்

நத்தத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல் நவ, 21 நத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்ஷா தலைமை தாங்கி, போட்டியை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி,…

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்.

கொடைக்கானல் நவ, 19 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் எம்.எம். தெருவில் அமைந்துள்ள குழந்தை இயேசு தொடக்கப்பள்ளியில் இந்த மாதம் 21ம் தேதி முதல் 27 ம் தேதி வரை தொடர்ந்து…

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம்.

திண்டுக்கல் நவ, 19 கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு நிதியை எதிர்பார்க்காமல் கூட்டுறவுத் துறையில் வரும் லாபத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். கோவையில் நடைபெறும்…

வட்டாட்சியார் அலுவலகத்தில் முற்றுகையிட்ட கிராம மக்கள்.

திண்டுக்கல் நவ, 18 வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில் 20சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது . அதனை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். மேலும் அந்த நிலத்துக்கு வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் அவர் மனு கொடுத்துள்ளார். இதனை அறிந்த கல்வார்பட்டி கிராம மக்கள்…

பால் விலை உயர்வை கண்டித்து 32 இடங்களில் பாரதியஜனதாகட்சி வினர் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் நவ, 16 தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரத்தில் மின்வாரிய அலுவலகம் அருகே பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன்…

சேதமடைந்த சாலையில் மரக்கன்று நடும் போராட்டம்.

திண்டுக்கல் நவ, 14 திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்த நிலையில் கடந்த 1 வாரமாக பெய்த கனமழையால் மேலும் சேதமடைந்தது. எனவே மழை மற்றும் பாலப்பணிகளால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை…

பிரதமர் மோடி, முதலமைச்சர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா.

திண்டுக்கல் நவ, 12 திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட…

பிரதமர் மோடி வருகைக்காக கொட்டும் மழையில் காத்திருந்த தொண்டர்கள்.

திண்டுக்கல் நவ, 11 திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலை. வரும் பிரதமர் மோடியை வரவேற்க கொட்டும் மழையில் தொண்டர்கள், பொதுமக்கள் காத்திருந்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராம் பல்கலைகழகத்தில் இன்று மாலை நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர…

ரயில்நிலையத்தில் பிரதமர் வருகையையொட்டி காவல் துறையினர் சோதனை.

திண்டுக்கல் நவ, 11 பிரதமர் நரேந்திரமோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகவே திண்டுக்கல்-மதுரை வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில்…

சாணார்பட்டி அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் 9 ஆடுகள் பலி.

திண்டுக்கல் நவ, 8 சாணார்பட்டி ஒன்றியம், கணவாய்ப்பட்டி கிராமம் கொரசின்னம்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் 9 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. இது சம்பந்தமாக கணவாய்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரவீன்குமார் தலைமையில்…