திண்டுக்கல் நவ, 11
திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலை. வரும் பிரதமர் மோடியை வரவேற்க கொட்டும் மழையில் தொண்டர்கள், பொதுமக்கள் காத்திருந்தனர்.
திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராம் பல்கலைகழகத்தில் இன்று மாலை நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மற்றும் முதல்வரை வரவேற்க காலை முதலே காந்தி கிராம் பல்கலைக்கழகம் எதிரே உள்ள சாலையில் பாஜக மற்றும் திமுகவினர், பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி, மேள தாளங்களுடன் காத்திருந்தனர்.