திண்டுக்கல் நவ, 11
பிரதமர் நரேந்திரமோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகவே திண்டுக்கல்-மதுரை வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைரோடு ரயில்நிலையங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் இருப்புபாதை எல்லைக்குட்பட்ட மெட்டூர் ரயில்வே பாலம் மற்றும் முருகன்பட்டி ரயில்வே பாலங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துணை ஆய்வாளர்கள் பாஸ்கரன் மற்றும் தனிப்பிரிவு காவலர் ராஜேஸ்குமார், காவல்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.