திண்டுக்கல் நவ, 16
தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரத்தில் மின்வாரிய அலுவலகம் அருகே பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் சபாபதி முன்னிலை வகித்து பேசினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், அவற்றை திரும்பபெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் முத்துகுமார், வேல்முருகன், சிம்மராஜா, முத்துவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.