Category: மாவட்ட செய்திகள்

அம்பை அருகே கொலை வழக்கில் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி அதிரடியாக கைது. காவல் துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்

நெல்லை செப், 14 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்த நிலையில் உடையார்…

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நுகர்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

நாகப்பட்டினம் செப், 14 நாகை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு துணை மேலாளர் ஹரி கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். இதில் நுகர் பொருள்…

குமரன் பூங்கா மேம்பாட்டு பணி தொடங்கி வைத்த சட்ட மன்ற உறுப்பினர்.

மயிலாடுதுறை செப், 14 கூறைநாடு திருமஞ்சன வீதியில் உள்ள குமரன் பூங்காவில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குழந்தைகள் விளையாட்டுகளுக்கான…

மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனுமதி மறுப்பு.

மதுரை செப், 14 நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, ராஜவல்லிபுரம் பாஜக. தலைவராக உள்ளேன். பிரதமர் மோடி பிறந்தநாள் விழா வருகிற 17 ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை…

மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கிய அமைச்சர் காந்தி.

கிருஷ்ணகிரி செப், 14 கிருஷ்ணகிரி அரசு பெண்கள், காவேரிப்பட்டணம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, பர்கூர்…

மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

கரூர் செப், 14 தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கரூர் மாவட்ட குழு சார்பில் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்…

தேவாலயங்கள் சீரமைக்கும் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பம். மாவட்ட ஆட்சியர் தகவல்.

கன்னியாகுமரி செப், 14 நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் தேவாலயங்கள் சீரமைத்தல் மற்றும் பழுது பார்த்தல் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டத்தில் சொந்தக் கட்டிடங்களில்…

மணிமுக்தா அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

கள்ளக்குறிச்சி செப், 14 கள்ளக்குறிச்சி அருகே 36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் மணி மற்றும் முக்தா ஆகிய ஆறுகள் வழியாக பாயந்தோடும் தண்ணீர் இந்த அணைக்கு வரும். இதன் மூலம் 30…

நமது நகரம் நமது பொறுப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்.

காஞ்சிபுரம் செப், 14 தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் நமது நகரம் நமது பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் தூய்மை பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நமது நகரம் நமது பொறுப்பு எனும்…

பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்குவதற்கான சமையல் கூடத்தை ஆட்சியர் பார்வை.

ஈரோடு செப், 14 தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் முதல் கட்டமாக நாளை காலை உணவு வழங்கப்பட…