Category: மாவட்ட செய்திகள்

தொண்டை மண்டல ஆதீனத்தின் 233-வது மடாதிபதி பதவி விலகல்.

திருச்சி நவ, 16 காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச சுவாமிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி திருச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தொண்டை மண்டல முதலியார் சமூக மக்கள் மற்றும் திருச்சி மடத்தின் நிர்வாகிகள்…

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

தஞ்சாவூர் நவ, 16 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்றார். பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமைதடுப்பு சட்டத்தின் கீழ்கொலை செய்யப்பட்ட வாரிசுதாரர்களுக்கு…

நெல் விதைக்கும் பணி தீவிரம்.

தேனி நவ, 16 தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி அருகே உள்ள கோட்டைப்பட்டி பள்ளபட்டி, அய்யனார்புரம், அம்மாச்சியாபுரம் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் முல்லைப் பெரியாறு மற்றும்…

தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை.

தென்காசி நவ, 16 தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் மூலம் 107 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள…

ஆதி திராவிட நலவிடுதிகளை பராமரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு. அமைச்சர் கயல்விழி தகவல்.

சேலம் நவ, 16 நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,…

சபரிமலைக்கு பேரிடர் மீட்பு படை விரைவு.

ராணிப்பேட்டை நவ, 16 பல்வேறு மீட்புப் பணிகளுக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தலா 15 பேரை கொண்ட இரு குழுவினர், திங்கள்கிழமை கேரள மாநிலம், சபரிமலைக்கு சென்றனர். அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் தேசிய பேரிடர் மீட்புப்…

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு கூட்டம்.

ராமநாதபுரம் நவ, 16 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி…

ஆலங்குடியில் மருத்துவ முகாம்.

புதுக்கோட்டை நவ, 16 ஆலங்குடி அரசு மருத்துவமனையி்ல் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை வகித்தார். இதில் மருத்துவர்கள் அருண்குமார், ஜோதிராஜன், லிபர்த்தி செவிலியர்கள் வேலுமணி, ஜான்,செல்வாம்பிகை,காயத்திரி,ஆய்வக…

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்.

பெரம்பலூர் நவ, 16 வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களாக 28 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 24 பேர் நேற்று காலை கல்லூரியில் வகுப்புகளுக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களை…

கூடலூர் பகுதியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு.

நீலகிரி நவ, 16 கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் பெய்தது. இதன் காரணமாக தேயிலை உள்பட அனைத்து விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டது. மேலும் அதிக கனமழையால் பச்சை தேயிலை விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே போதிய…