Author: Mansoor_vbns

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் செப், 19 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளார்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கோரிக்கை மாநாடு.

வேலூர் செப், 19 வடுகந்தாங்கலில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. வட்ட தலைவர் கே.சண்முகம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் கண்ணதாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் ரவி கலந்து கொண்டு…

மாநில செய்திகள் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்.

விழுப்புரம் செப், 19 திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணைதலைவர் கோமதிநிர்மல்ராஜ் வரவேற்றார். கூட்டத்தில் குடிநீர்,…

2 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை டவுனில் அரசு பொருட்காட்சி நாளை தொடங்குகிறது. சபாநாயகர்-அமைச்சர்கள் பங்கேற்பு.

நெல்லை செப், 19 நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்ப டும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு அரசு பொருட் காட்சி வ.உ.சிதம்பரனார் மணி மண்டபத்தின் அருகே நாளை (செவ்வாய்க் கிழமை)…

இயற்கை உரம் தயாரிப்பது குறித்த பயிற்சி.

கோயம்புத்தூர் செப், 19 ஆனைமலையில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனைமலை மற்றும் ஒடையகுளம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேல் குடியிருப்புகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். திடக்கழிவு…

கழுதை பால் விற்பனை அமோகம்.

ஈரோடு செப், 19 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). இவர் கழுதையை பராமரித்து அதில் இருந்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். குழந்தைகளுக்கு கழுதை பாலை கொடுத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் கழுதை…

பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தினை செய்தித்துறை அமைச்சர் மாலையிட்டு மரியாதை.

காஞ்சிபுரம் செப், 19 காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்து பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி…

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம். தரிசனம் செய்ய பல மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி‌ செப், 19 புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எண்ணுகின்றனர். இதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு ஏராளமானபக்தர்கள் வந்துள்ளனர்.…

ராகுல் காந்திக்கு ஆதரவாக தீர்மானம். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்.

ஜெய்ப்பூர் செப், 19 ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எழ தொடங்கியுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டிகள் இது தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். மேலும் ராகுல் காந்தியை கட்சியின்…

சமூக நீதி நாள் உறுதி மொழி. மாவட்ட ஆட்சியர் தலைமை.

நெல்லை செப், 19 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்றுக்கொண்டனர்.