கரூர் நவ, 20
கரூரில் நடந்த 69 -வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1926 பயனாளிகளுக்கு ரூ.12.33 கோடி அளவில் நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் , இளங்கோ , சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.