Spread the love

சென்னை நவ, 20

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கலகத் தலைவன் படத்தை பார்த்த ரசிக்ரகள் பலரும் படத்தின் கதைகளத்தையும், திரைக்கதையும் மற்றும் உதயநிதி, நிதி அகர்வால், ஆரவ் உள்ளிட்ட பலரின் நடிப்பையும் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *