திருப்பூர் நவ, 18
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, பொங்குபாளையம் ஊராட்சி, பள்ளிபாளையம் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
உடன் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள், மாவட்ட கவுன்சிலர் வேல் குமார் சாமிநாதன், பட்டம்பாளையம் சொசைட்டி தலைவர் பழனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா வடிவேல்,யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், பாசறை செயலாளர் சந்திரசேகர், உள்ளிட்டருடன் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.