சென்னை நவ, 17
கார்த்திகை தொடங்கியுள்ளதால் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மாதத்தில் ஐயப்பனை வழிபட போவது வழக்கம். அதற்காக இன்று அதிகாலையிலேயே பல கோவில்களில் மாலை அணிய பக்தர்கள் கூடினர். காவி வேட்டியும், கருப்பு வேட்டியும் அணிந்து மாலை அணிந்து பக்தர்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து மலைக்கு செல்வார்கள்.
