மயிலாடுதுறை நவ, 17
மயிலாடுதுறை மாவட்டம் தலச்சங்காட்டில் நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைவது உறுதி. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை எங்கள் கூட்டணியில் இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.