சென்னை நவ, 18
ஆன்லைன் சூதாட்ட தடை விதிக்க தமிழக அரசு கடந்த மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நியாயமானதல்ல என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். எந்த நோக்கத்திற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.