காஞ்சிபுரம் நவ, 17
மொரிஷியஸ் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன் 3 நாள் சுற்றுலா பயணமாக தமிழகம் வருகை புரிந்தார். முதல் நாள் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்டார். கடற்கரை கோவில் சிற்பங்களை ரசித்து பார்த்த அவர், அங்கு தனது குடும்பத்தினருடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவரை வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் தாயார் சன்னதி, மூலவர் வரதராஜ பெருமாள் ஆகிய சன்னதிகளை சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார். கோவில்களில் தரிசனம் அதனைத் தொடர்ந்து தோஷம் நீக்கும் தங்க பள்ளியை வழிபட்டு கோவில் திருவிழா மற்றும் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவருக்கு உலகப் புகழ் பெற்ற கோவில் இட்லி அவருக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதன் தொடர்ந்து சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை புரிந்தார். மொரீஷியஸ் அதிபர் வருகையையொட்டி காஞ்சிபுரம் முழுக்க 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.