தருமபுரி நவ, 17
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமிற்கான விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக மக்களைத் தேடி மருத்துவ அலுவலர் மரு.அனிதா ராஜ், மாவட்ட தடுப்பூசி அலுவலர் கார்த்திக், தொண்டு நிறுவன மாவட்ட திட்ட அலுவலர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.