தோகா நவ, 16
உலகின் 2-வது மிகப் பெரிய விளையாட்டு திருவிழா, உலக கோப்பை கால்பந்து போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. கடைசியாக உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் 2018ம் ஆண்டு நடந்தது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 20 ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் கால்பந்து திருவிழா நடக்கிறது.
கால்பந்து உலகக் கோப்பை தொடரில் மொத்தம் ரூ.3,586 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெற்றி பெறும் அணிக்கு ரூ.342 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்திற்கு ரூ.244 கோடி, மூன்றாம் இடத்திற்கு ரூ.219 கோடி, நான்காம் இடத்திற்கு ரூ.203 கோடி, கால் இறுதியுடன் வெளியேறும் அணிக்கு ரூ.138 கோடி, இரண்டாவது சுற்றில் வெளியேறும் அணிக்கு ரூ.105 கோடி லீக் சுற்றில் வெளியேறும் அணிக்கு ரூ.73 கோடி என பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.