மயிலாடுதுறை நவ, 16
பரிச அருகே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பட்டமங்கலம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு உழவர் செயலி குறித்த ஒரு நாள் பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை அத்துடன் கலைஞரின் வேளாண்மை திட்டத்துடன் 21 தலைப்புகளில் இந்த செயலி செயல்படுகிறது என்று விவரமாகவும் உழவர் செயலி பயன்படுத்துதல் பற்றியும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறினார்.
இப்பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் பாரி, குணசேகரன், மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை உதவி வேளாண்மை அலுவலர் சுகுமார் ஏற்பாடு செய்திருந்தார். அட்மா திட்ட உதவி தொழிற்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினார்.