சென்னை நவ, 16
இன்று தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன என்று கூறிய அவர் நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
